சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்: பொதுப்பணித்துறை செயலாளர் அறிக்கை..!
2022-12-01@ 17:11:40

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்கள்.
அமைச்சருடன், நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர். மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி (Lift) பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் (Lifts) மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
இடிக்கப்பட உள்ள 72 கடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வியாபாரிகள் சாலை மறியல் : வில்லிவாக்கத்தில் பரபரப்பு
கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட இந்தியாவின் 34 நகரங்களில் இன்று ஒரே நாளில் ஜியோ 5ஜி சேவைகள் தொடக்கம்.!
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய பணிக்கான இணையதள பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் அதிக திறன் கொண்ட நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் ஆணையாளர்.!
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,546 வழக்குகள் பதிவு: ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!