தமிழகத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 47வாகனம் பறிமுதல்; 191 பேர் அதிரடி கைது
2022-12-01@ 16:55:02

சென்னை: தமிழகத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 52 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பதினொறு இலட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து ரூபாய் மதிப்புள்ள, 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 191 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 02 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
லாரி மீது சொகுசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்
ராஜீவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ: போக்குவரத்து பாதிப்பு
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி; 217 பதவிகளுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி: 126 தேர்வு மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!