SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்டில் மாடு மேய்க்க சென்றபோது 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள் 5 பேர் சிக்கினர்: உதவி கேட்டு வீடியோவில் உருக்கம்

2022-12-01@ 16:40:30

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காட்டில் மாடுமேய்க்க சென்ற சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, உதவி கேட்டு சமூகவலைதள பக்கத்தில்  உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவரது தந்தை, தாய் இறந்துவிட்டனர். அந்த சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் மாடுமேய்க்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அப்போது இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துவைத்து மிரட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தங்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சிறுமி மறுத்ததால் உன் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 24ம்தேதி காலை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சிறுமியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இவ்வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தாய், தந்தை இல்லாததால் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றார்.‘‘தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட காவல் எஸ்பி ஆகியோருக்கு அந்த சிறுமி நன்றி தெரிவித்துள்ளார்.

‘‘பெற்றோர் இல்லாமல் மிகவும் வறுமை உள்ளேன். எனவே, தனக்கு உதவி செய்ய முதல்வரை சந்திக்கவேண்டும்’ என்று சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்