மூதாட்டியை கொன்று பலாத்காரம்: வாலிபருக்கு சாகும் வரை சிறை
2022-12-01@ 14:36:02

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓட்டனந்தல் புதுமனை தெருவை சேர்ந்தவர் கவிதாஸ்(26). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2019ம் பிப்ரவரி 17ம் தேதி இரவு ஆலங்குப்பம் பகுதியில் பைப்லைன் புதைக்கும் பணியை முடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ் தான் வைத்திருந்த பேனா கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தி படுகொலை செய்தார்.
இறந்த பிறகு மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் காளிதாஸ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து கவிதாஸை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி சாந்தி குற்றவாளி கவிதாசுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
8 வழக்கில் தொடர்பு
கவிதாஸ் ஏற்கனவே 8 வழக்கில் தொடர்புடையவர். கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கலித்திரம்பட்டு பகுதியில் வயதான அக்கா, தங்கை ஆகியோரை கொலை செய்துவிட்டு பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு நகையை திருடி சென்ற வழக்கும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஊட்டி நகரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!