செம்மரக்கட்டை கடத்த முயற்சி: இருவர் கைது: 300 கிலோ பறிமுதல்
2022-12-01@ 01:39:39

புழல்: சோழவரம் அருகே காந்தி நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டுக்குள் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து கடத்தி செல்ல தயார்நிலையில் இருப்பதாக நேற்றுமுன்தினம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அசோகன் என்பவரின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அந்த வீட்டுக்குள் சுமார் 300 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து, கடத்தி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்து தப்பி ஓட முயன்ற அசோகன் (50), அருண்குமார் (28) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர், இருவரையும் சோழவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மரக் கட்டைகளை பதுக்கி கடத்தி செல்ல முயன்ற அசோகன், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் செம்மரக் கடத்தலில் யார், யார் உள்ளனர், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கும்பகோணத்தில் தொடர்செல்போன் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
ஊட்டி நகரில் இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது
இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!