மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை..!!
2022-11-30@ 16:52:55

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இடைநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 621 புள்ளிகள் உயர்ந்து 63,303 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் 418 புள்ளிகள் உயர்வுடன் 63,100 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது. மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்கு 4 சதவீதம், அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2 சதவீதம், இந்துஸ்தான் யுனிலீவர் 1.9 சதவீதம் விலை உயர்ந்தது. பவர் கிரீட், பார்த்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டைட்டன், கோட்டக் வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் பங்குகளும் விலை உயர்ந்து கைமாறின.
இண்டஸ்இன்ட் வங்கி, எஸ்.பி.ஐ, எச்.சி.எல். டெக், ஐ.டி.சி. உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 18,758 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. இடைநேர வர்த்தகத்தில் நிஃப்டியும் 198 புள்ளிகள் உயர்ந்து 18,816 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
மேலும் செய்திகள்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: அதிரடியா குறைந்த விலை.! சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை
பிப்-04: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை சரிவு: இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி
2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
பிப்-03: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!