மூன்றாவது கணவரும் வேண்டாம்... ஹாலிவுட் தம்பதி கன்யே - கிம் விவாகரத்து: 4 குழந்தைக்கும் மாதம் ரூ1.61 கோடி தரவேண்டும்
2022-11-30@ 15:38:45

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தம்பதியான கன்யே வெஸ்டும், கிம் கர்தாஷியனும் விவாகரத்து செய்து கொண்டனர். 4 குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதம் ரூ.1.61 கோடி வழங்க கன்யே வெஸ்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் கன்யே வெஸ்டும், ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியனும் காதலித்து ‘டேட்டிங்’ மூலம் வாழ்க்கையை தொடங்கினர். அவர்களுக்கு 2013ல் பெண் குழந்தை பிறந்தது. 2014ல் திருமணம் செய்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக டாமன் தாமஸ் என்பவரை கிம் கர்தாஷியன் திருமணம் செய்து கொண்டார். அடுத்த 72 நாட்களுக்குப் பிறகு அவர்களின் உறவு முறிந்ததால், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது மூன்றாவது கணவரான கிம் கன்யேயிடம் இருந்து கிம் கர்தாஷியன் விவாகரத்து கோரினார். தற்ேபாது இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ‘கணவர் கன்யே ெவஸ்ட், தனது மனைவியான கிம் கர்தாஷியனுக்கு மாதம் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை (ரூ.1.61 கோடி) குழந்தைகள் பரமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளின் கல்விச் செலவு, பாதுகாப்பு ஆகியவற்றில் இருவரும் சரிபாதியாக செலவு செய்ய வேண்டும். குழந்தைகளுக்குள் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகள்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
இஸ்ரேலில் பதற்றம் மதவழிபாட்டு தலத்தில் 7 பேர் சுட்டுக்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!