தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
2022-11-29@ 15:00:03

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்.18-ம் தேதி பதவியேற்றத்தக்கவும், பதவியேற்ற நாளில் இருந்து அவர் ஒரு பிரச்னைக்குரிய நபராக இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சனாதன கொள்கை பற்றி பேசி வருவதாகவும், இந்து கொள்கை குறித்து பேசிவருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி திராவிட இயக்க கொள்கைக்கு எதிராகவும் அவர் பேசி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமிழக அரசு அனுப்ப கூடிய கோப்புகளுக்கு அவர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மாதக்கணக்கில் பல கோப்புகள் நிலுவையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பொதுமக்களின் நலனுக்கு எதிராக அவர் செயல்படுவதாகம், அவர் ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதுமட்டுமின்றி புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறியுள்ளார். ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் அதன் தலைவர் பதவியானது ஓய்வூதியம், மற்றும் சம்பளம் பெறக்கூடிய பதவி என்றும், அந்த பதிவில் அவர் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 158 உட்பிரிவு 2-ன் கீழ் ஆளுநர் எந்த ஒரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த நிறுவனத்தில் பதவி வகித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாலும் அவர் ஆளுநர் பதவிவகிக்க தகுதியற்றவர் எனவே அவரை அந்த ஆளுநர் பதிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர், மூன்றாவது பிரதி வாதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!