தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-11-29@ 08:48:28

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநேல்வேலி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேனி, விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை: முதல்வர் உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!