சென்னையில் புதிய கார்களை திருடி நெல்லையில் விற்பனை; திடுக் தகவல்கள் அம்பலம்
2022-11-29@ 00:46:08

நெல்லை: சென்னையில் புதிய கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து தென் மாவட்டங்களில் விற்ற நெல்லை ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக புதிய கார்கள் திருட்டு போனது. இதுகுறித்து தாம்பரம் மற்றும் ஆவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து சென்னையில் கார்களை கடத்திய விவரம் தெரிய வந்தது.
சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட அங்குள்ள சில பகுதிகளில் புதிய கார்களை திருடியது தெரிய வந்தது. திருடிய கார்களுக்குரிய ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போன்று போலியாக தயாரித்து ஆட்டோ டிரைவரும், அவரது கூட்டாளிகளும் காருடன் தப்பித்து தென் மாவட்டங்களுக்கு வந்து புரோக்கர்களை அணுகி, காரின் உரிமையாளர் அவசரமாக வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாலும் செலவிற்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாலும், கார்களை குறைந்த விலைக்கு விற்கவுள்ளதாகவும், புரோக்கர்களுக்கு அதிகளவில் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுவர்.
இதனை நம்பி கார் வாங்க வருபவர்களிடம் இந்த கும்பல் அட்வான்சாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் வாங்கிக் கொண்டு தப்பி விடுவர். இப்படியும் பலரை ஏமாற்றி வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி கும்பலிடம் இருந்து இரு கார்களை போலீசார் பறிமுதல் செய்ததும் ஆட்டோ டிரைவரும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளனர். ஆட்டோ டிரைவரும் கூட்டாளிகள் மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!