கார் வெடிப்பு குறித்து அவதூறு; பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது
2022-11-29@ 00:46:06

கோவை: சென்னையை சேர்ந்தவர் பா.ஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி. இவர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிந்ததாக கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 23ம் தேதி உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பு ஆஜர்படுத்தினர். வருகிற 12ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும், மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் விசாரிக்கவும் நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்தார்.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!