கெலாட்-பைலட் இருவரும் காங்கிரசின் சொத்துக்கள்; ராகுல் காந்தி முதன்முறையாக கருத்து
2022-11-29@ 00:45:37

இந்தூர்: அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, 2 பேருமே காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் வலுத்துள்ளது. இதுபற்றி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் எனது முழுக்கவனமும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் தான் உள்ளது. அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் ஒன்றும் யாத்திரையை பாதிக்காது. ஆனால் இருதலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
அப்போது அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் கூறுகையில்,’ எனது முழுக்கவனமும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருப்பதால் வேறு தலைப்பு செய்தி எதையும் நான் உங்களுக்கு தர விரும்பவில்லை. உங்கள் கேள்விக்கு எனது பதில் இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்தில் கிடைக்கும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருப்பதுதான் இன்றைய முக்கிய பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சிறு,குறு தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நாட்டின் குரலை இந்திய ஒற்றுமை யாத்திரை எதிரொலிக்கிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!