பெண்களை பற்றி இழிவான பேச்சு மன்னிப்பு கேட்டார் யோகா குரு ராம்தேவ்
2022-11-29@ 00:45:34

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த யோகா பயிற்சி முகாமில் பங்கேற்ற பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், ‘‘பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள், எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்’’என்றார். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அடுத்த 72 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது மன்னிப்பு கடிதத்தை மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் பாபா ராம்தேவ், ‘பெண்கள் அதிகாரத்துக்காக எப்போதும் பணியாற்றுவேன். ஒன்றிய அரசின் பெண் குழந்தைகள் காப்போம் என்ற திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நான் ஆதரித்துள்ளேன். ஆதலால் எனக்கு பெண்களை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் யாருடைய மனதை புண்படுத்தியிருந்தாலும் அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!