மாணவனுக்கு தீவிரவாதி பட்டம் பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்
2022-11-29@ 00:12:06

உடுப்பி: கர்நாடகாவில் தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பின் போது முஸ்லிம் மாணவரை ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் மற்றும் பேராசிரியரிடையே கடந்த வாரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், வகுப்பின் போது பேராசிரியர் ஒருவர், வகுப்பறையில் மாணவனின் பெயரை கேட்கிறார். அவர் முஸ்லிம் பெயரை சொன்னதும், ‘‘ஓ, நீ கசாப் மாதிரியா!’’ என்கிறார். மும்பை தீவிரவாத தாக்குதலில் துப்பாக்கி ஏந்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ல் தூக்கிலிடப்பட்டான்.
அவனை குறிப்பிடும்படி பேராசிரியர் குறிப்பிட்டதால் மறுப்பு தெரிவித்து மாணவர், ‘‘இந்த நாட்டில் முஸ்லிமாக இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் என்னுடைய மதத்தை பற்றி கேலி பண்ணக் கூடாது சார். இது ஒன்றும் வேடிக்கை அல்ல. இழிவான செயல்’’ என வேதனையும் ஆவேசமும் கலந்தபடி பேசுகிறார். இதைக் கேட்ட ஆசிரியர், ‘‘நீ என் மகன் மாதிரி’’ எனக் கூறி சமாதானப்படுத்த முயல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?.. ராகுல் காந்தி விளாசல்..!
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இந்தியாவில் 76.5 கோடி பேருக்கு கொரோனாவா?.. விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை: ஒன்றிய அரசு
அவைக் குறிப்பில் இருந்து ராகுல் காந்தி பேசியதை நீக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!