SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 7 சிக்சர்கள்! ருதுராஜ் உலக சாதனை: அரையிறுதியில் மகாராஷ்டிரா

2022-11-29@ 00:12:00

அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் 2வது காலிறுதியில், உத்தர பிரதேச அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணி தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெயிக்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை (ஒரு ‘நோ பால்’) விளாசி லிஸ்ட் ஏ போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்தார். இந்த போட்டியில் 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மகாராஷ்டிரா அரையிறுதிக்கு முன்னேறியது. சர்தார் படேல் ஸ்டேடியத்தின் பி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர் ருதுராஜின் ருத்ரதாண்டவத்தால், மகாராஷ்டிரா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது. ராகுல் திரிபாதி 9, சத்யஜீத் 11, அங்கித் பாவ்னே, அஸிம் காஸி தலா 37 ரன், திவ்யங் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ருதுராஜ் 220 ரன் (159 பந்து, 10 பவுண்டரி, 16 சிக்சர்), சவுரவ் நவாலே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உ.பி. ஸ்பின்னர் ஷிவா சிங் வீசிய 49வது ஓவரில் தொடர்ச்சியாக 7 இமாலய சிக்சர்களை தூக்கிய ருதுராஜ் (5வது பந்து ‘நோ பால்’) லிஸ்ட் ஏ போட்டிகளில் உலக சாதனை படைத்தார். அந்த ஓவரில் மட்டும் 43 ரன் கிடைத்ததும் புதிய சாதனையாக அமைந்தது. அடுத்து களமிறங்கிய உ.பி. அணி 47.4 ஓவரில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 58 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 159 ரன் (143 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் ஷர்மா 33, பிரியம் கார்க் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். மகாராஷ்டிரா பந்துவீச்சில் ராஜ்வர்தன் 5. சத்யஜீத், ஷம்சுசமா காஸி தலா 2, மனோஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதிக்கு முன்னேறிய மகாராஷ்டிரா அணி, 3வது காலிறுதியில் ஜம்மு காஷ்மீரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அசாம் அணியை சந்திக்கிறது.

ஜம்மு 50 ஓவரில் 350/7 (ஷுபம் கஜுரியா 120, ஹெனன் நசீர் 124, பாஸில் ரஷித் 53); அசாம் 46.1 ஓவரில் 354/3 (ரிஷவ் தாஸ் 114*, ரயன் பராக் 174). பஞ்சாப் அணியுடன் முதல் காலிறுதியில் மோதிய கர்நாடகா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் 50 ஓவரில் 235 ரன் ஆல் அவுட் (அபிஷேக் ஷர்மா 109, சன்விர் சிங் 39, அன்மோல் 29); கர்நாடகா 49.2 ஓவரில் 238/6 (சமர்த் 71, நிகின் 29, மணிஷ் 35, கோபால் 42, மனோஜ் பண்டகே 25*). நாளை நடக்கும் அரையிறுதியில் கர்நாடகா - சவுராஷ்டிரா, அசாம் - மகாராஷ்டிரா மோதுகின்றன.

* தமிழகம் ஏமாற்றம்
4வது காலிறுதியில் சவுராஷ்டிரா அணியுடன் மோதிய தமிழகம் 44 ரன் வித்தியாசத்தில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. சவுராஷ்டிரா 50 ஓவரில் 293/8 (ஹர்விக் 61, அர்பித் 51, சிராக் ஜனி 52*, பிரேரக் 35, கோஹில் 34, உனத்கட் 22); தமிழகம் 48 ஓவரில் 249 ஆல் அவுட் (சாய் கிஷோர் 74, கேப்டன் இந்திரஜித் 53). தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 8 ரன், தினேஷ் கார்த்திக் 9 ரன்னில் வெளியேறியது, தமிழக அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்