பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக மிரட்டி சுய உதவிக்குழு நிர்வாகியிடம் ரூ.42 ஆயிரம் துணிகர வழிப்பறி: முகமூடி ஆசாமிக்கு போலீஸ் வலை
2022-11-29@ 00:11:41

சென்னை: சென்னை தேனாம்பேட்டை நக்கீரன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் புனிதா (38). சுய உதவிக்குழு நிர்வாகியாக உள்ளார். இவர், நேற்று காலை சுய உதவிக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொடுத்த பணத்தை, தனது வீட்டின் முன்பு அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை புனிதா மீது ஊற்றி எரித்து விடுவேன் என மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத புனிதா திருடன் திருடன் என உதவி கேட்டு கத்தினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் முகமூடி ஆசாமி பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து புனிதா ேதனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நக்கீரன் நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
Gasoline Intimidation Self Help Group Executive Entrepreneur Robbery Police Net பெட்ரோல் மிரட்டி சுய உதவிக்குழு நிர்வாகி துணிகர வழிப்பறி போலீஸ் வலைமேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!