போதைப்பொருள் வழக்கில் நைஜீரிய குற்றவாளி கைது
2022-11-29@ 00:11:38

அண்ணா நகர்: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் கடந்த 12ம் தேதி ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்கா அம்சா (32) என்பவர் ஓலா காரில் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரை அண்ணாநகர் போலீசார் காவலில் எடுத்து 3 நாள் விசாரித்தனர். பிறகு 25ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். பிரிஸ்கா கொடுத்த ரகசிய தகவலின்படி தனிப்படை போலீசார் செல்போன்களை ஆய்வு செய்து டவர் மூலம் கண்காணித்தனர். போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலை கைது செய்ய அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் லாட்ஜில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், நைஜீரியாவை சேர்ந்த லியோனார்டு (32) என்றும், கோகைன் போதைப்பொருளை ஆப்பிரிக்கா நாட்டில் மொத்தமாக வாங்கி வந்து, வெளிநாட்டு பெண்களை சுற்றுலாவிற்கு தமிழகத்திற்கு செல்வதுபோல் அழைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வியோனார்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேலும் கோகைன் போதைப்பொருளை சப்ளை செய்யும் கும்பலை பிடிப்பதற்கு தனிப்படை தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!