ஜீவா ரயில் நிலையத்தில் பைக் திருடிய 2 பேர் கைது
2022-11-29@ 00:11:09

பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் மாவட்டம், சுப்பிரமணி பரதேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (38). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் திருவள்ளூரில் இருந்து ரயில் மூலம் ஜீவா ரயில் நிலையம் வந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, கடந்த 25ம்தேதி தனது பைக்கை ஜீவா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு சென்றார். மறுநாள் வேலைக்கு செல்வதற்காக ரயில் மூலம் மீண்டும் ஜீவா ரயில் நிலையத்திற்கு வந்து தனது பைக்கை எடுக்க சென்றார். அப்போது, தனது பைக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஓட்டேரி பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் பைக்கை திருடி செல்வது கண்டுபிடித்தனர். இதனையடுத்து, புளியந்தோப்பு கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்த விஜய் (22) மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த எடிசன் (21) ஆகிய 2 பேரையும் ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!