4 பெண் குழந்தைகளின் தாய் பலாத்காரம் செய்து கொலை?... உறவினர்கள் சாலை மறியல்
2022-11-28@ 21:22:37

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம்(38). இவரது மனைவி பழனியம்மாள்(35). திருச்செல்வம் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உளளனர். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல் கடந்த 25ம் தேதி கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பழனியம்மாளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை தொம்புறம்பட்டி பகுதியில் உள்ள தைல மரக்காட்டிற்குள் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உறவினர்கள் சென்று பார்த்த போது, பழனியம்மாள் சடலமாக கிடந்தது தெரிந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பழனியம்மாளின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பழனியம்மாள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பல்லவராயன்பத்தை-புதுப்பட்டி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்டிஓ முருகேசன், ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி, தாசில்தார் ராமசாமி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது விரைந்து விசாரணை நடத்தப்படுமென்றும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பழனியம்மாள் பாலியல் பலா்த்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் ேபரில், ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!