பிரதமர் மோடி அழைப்பை ஏற்று வருகிற 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: 5ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கிறார்கள்
2022-11-28@ 20:42:59

சென்னை: பிரதமர் மோடி அழைப்பை ஏற்று வருகிற 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். 5ம் தேதி ஜி-20 அமைப்பு குறித்து நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கிறார்கள். இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4ந்தேதி ஏற்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்வர்கள் கூட்டத்தை டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வருகிற டிசம்பர் 4ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 4ம் தேதி இரவு டெல்லியில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ந்தேதி ஜி-20 அமைப்பு குறித்து விளக்குவதற்காக பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடியை தனியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதைத்தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் சிலரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!