ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசிய ருத்துராஜ் கெய்க்வாட்: உ.பி. அணிக்கு எதிரான விஜய் ஹசாரே தொடரில் அசத்தல்..!
2022-11-28@ 16:33:59

அகமதாபாத்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அகமதாபாத் நகரில் நடைபெற்ற உத்தரப்பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மகாராஷ்டிரா கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் இருந்தே உத்தரப்பிரதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சதம் அடித்த பின் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 150 ரன்கள் எடுத்து வீரநடை போட்ட ருத்துராஜ் கெய்க்வாட் சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங் வீசிய 49வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார்.
முதல் 3 பந்துகளை ருத்துராஜ் சிக்சர் பறக்கவிட 4வது நோ பால் என அறிவிக்கப்பட்டது. அதிலும் சிக்சர் அடித்து நொறுக்கிய ருத்துராஜ், கடைசி 2 பொந்துகளிலும் சிக்சர் விளாசினார். ருத்துராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 16 சிக்சர்களுடன் 220 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னிங்ஸ் முடிவில் மகாராஷ்டிரா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்த ருத்துராஜ்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!