திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
2022-11-28@ 01:31:35

சென்னை: திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அமைப்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அணியின் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக சட்டதிட்டத்தில், திமுக துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதியின்படி அமைப்புசாரா ஓட்டுநர்களின் நலன் கருதி, தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி எனும் புதிய துணை அமைப்பும்; தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறையை மேம்படுத்திட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்படுகிறார்.
விளையாட்டு மேம்பாட்டு அணித் துணைச் செயலாளர்களாக கவுதம சிகாமணி எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பைந்தமிழ் பாரி, வே.நம்பி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு துரைமுருகன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களை நியமித்தும் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக தலைவர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தயாநிதி மாறன் எம்.பி. நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார்.
Tags:
திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. நியமனம் பொதுச்செயலாளர் துரைமுருகன்மேலும் செய்திகள்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர் உயிரிழந்த பரிதாபம்: வியாசர்பாடியில் பரபரப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10வது நாளாக சிஎம்டிஏ அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!