கணவன் மீது பைக் மோதல், தட்டிக்கேட்ட பெண் சரமாரி குத்தி கொலை; லாரி டிரைவர் கைது
2022-11-28@ 00:30:06

சாணார்பட்டி: நடந்து சென்ற கணவன் மீது பைக் மோதியதை தட்டி கேட்ட பெண்ணை சரமாரி குத்தி கொலை செய்த, லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமி (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). லாரி டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு பைக்கில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற சக்திவேல் மீது மோதினார். இதனை உடன் இருந்த சக்திவேலின் மனைவி லட்சுமி தட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சக்திவேலும் அவரது மனைவி லட்சுமியும் வீட்டு வாசலில் நின்றிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிவக்குமார் மீண்டும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார், திருப்புளியால் லட்சுமியை வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகே பர்மா காலனியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். பைக் மோதிய விபத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானில் இருந்து ராணுவ அதிகாரி என்று கூறி கூகுள் பேவில் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் சுருட்டல்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!