ஆந்திரா ரயில் நிலையத்தில் பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம்
2022-11-28@ 00:30:03

திருமலை: பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் உடமைகளுடன் கீழே இறங்கி அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. பின்னர், தீ மளமளவென எரிந்ததால், ரயில் நின்றவுடன் இதை பார்த்த பயணிகள் தங்கள் உடமைகளுடன் ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் தீயணைப்பு கருவிகளுடன் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். புகை பரவியதை கண்ட பயணிகள் உடனடியாக கீழே இறங்கிச் சென்றதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ரயிலில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் ஒருமணிநேரம் காலதாமதாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!