மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் வாக்குரிமையை பறிக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சர் அதிரடி
2022-11-28@ 00:30:01

புதுடெல்லி: ‘மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறுவோரின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசி உள்ளார். ஐநாவின் உலக மக்கள்தொகை கணிப்பின்படி, அடுத்த ஆண்டில் இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மிகவும் முக்கியமானது. ஏனெனில் நம்மிடம் குறைவான வளங்களே உள்ளன.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக ‘ஒரு குழந்தை கொள்கையை’ சீனா அமல்படுத்தியது. இதன் மூலம் அவர்கள் வளர்ச்சி அடைந்து உள்ளனர். சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறக்கின்றன. நாம் எப்படி சீனாவுடன் போட்டியிடுவோம்? எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான சட்டத்தை எந்த மதமும் பாரபட்சமின்றி அனைத்து மக்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க கூடாது. அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
அக்னி வீரர் பணியிடங்கள் முதலில் நுழைவு தேர்வு: ராணுவம் அறிவிப்பு
குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர் போராட்டம்; அசாம் அரசு நடவடிக்கை சிறுமிகளின் நிலை என்ன?.. ஓவைசி கேள்வி
பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மனைவி பரபரப்பு புகார்
உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேஷன் ஷோ: பார்வையாளர்கள் வரவேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!