பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் 2வது ஹாக்கி டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி
2022-11-28@ 00:29:35

அடிலெய்டு: இந்திய அணியுடனான 2வது ஹாக்கி டெஸ்ட் போட்டியில், பிளேக் கோவர்சின் ஹாட்ரிக் அசத்தலால் ஆஸ்திரேலியா 7-4 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், துரதிர்ஷ்டவசமாக கடைசி நிமிடத்தில் கோல் விட்டுக்கொடுத்த இந்தியா 4-5 என்ற கணக்கில் போராடி தோற்றது. ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 3வது நிமிடத்திலேயே இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து ஆஸி. தரப்புக்கு அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஆஸி. அணியின் பிளேக் கோவர்ஸ், ஜாக் வெல்ச் அடுத்தடுத்து கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். 3வது 15 நிமிட நேர ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-4 என பின்தங்கியிருந்தது.கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் துடிப்புடன் விளையாடி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, கோவர்சின் ஹாட்ரிக் அசத்தலால் 7-4 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய தரப்பில் ஹர்மன்பிரீத் 2 கோல் (3வது, 60வது நிமிடம்), ஹர்திக் சிங் (25’), முகமது ரஹீல் (36வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர்.
ஆஸ்திரேலியா சார்பில் கோவர்ஸ் 3 கோல் (12வது, 27வது, 53வது நிமிடம்), வெல்ச் 2 கோல் (17வது, 24வது நிமிடம்), ஜேக் வெட்டன் (49’), ஜேக்கப் ஆண்டர்சன் (48’) தலா 1 கோல் அடித்தனர். நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் நாளை மறுநாள் நடக்கிறது.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!