மெஸ்ஸி மெர்சலில் மிரண்டது மெக்சிகோ; அர்ஜென்டினா உற்சாகம்
2022-11-28@ 00:29:31

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், மெக்சிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. முதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா அணி, தனது 2வது போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் நேற்று மெக்சிகோவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளுமே தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால், இடைவேளையின்போது 0-0 என சமநிலை வகித்தன.
2வது பாதியில் முனைப்புடன் விளையாடி தாக்குதலை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா அணிக்கு, 64வது நிமிடத்தில் நல்ல பலன் கிடைத்தது. கோல் பகுதிக்கு முன்பாக சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருந்து மெஸ்ஸி தரையோடு அடித்த பந்து மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோவை ஏமாற்றி வலைக்குள் தஞ்சம் புக... அர்ஜென்டினா ரசிகர்களின் ஆரவாரத்தில் லுசெய்ல் அரங்கம் அதிர்ந்தது.
ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் மெஸ்ஸி வாகாகக் கடத்தி கொடுத்த பந்தை இளம் வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் அபாரமாக கோல் அடிக்க, அர்ஜென்டினா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. கடைசி கட்ட நிமிடங்களில் கோல் அடிக்க, இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது.
சி பிரிவில் போலந்து 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, அர்ஜென்டினா, சவுதி அரேபியா தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. மெக்சிகோ (1) கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. அர்ஜென்டினா - போலந்து, சவுதி அரேபியா - மெக்சிகோ மோதலின் முடிவை பொறுத்தே சி பிரிவில் இருந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறப்போகும் 2 அணிகள் எவை என்பது தெரியும்.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!