ஈழ விடுதலை போராளிகளுக்கு வீரவணக்கம்; ராமதாஸ் டிவீட்
2022-11-27@ 00:26:48

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவ.27ம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அது தான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வும் கூட. உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கனவும், தாகமும் கூட தனித்தமிழ் ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தங்களின் நாட்டை தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதன்படி ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!