வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
2022-11-27@ 00:26:46

சென்னை: வனத் தொழில் பழகுநர் பதவிக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி 6) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு வருகிற 4ம் தேதி முற்பகல் தாள்-1 ஓஎம்ஆர் முறையிலும், தாள்-2, தாள்-3 கணினி வழித் தேர்வாகவும் வருகிற 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகல், 11ம் தேதி முற்பகல் என 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!