அதானி துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் கடும் வன்முறை தடியடி, கல்வீச்சு; போலீசார் உள்பட பலர் காயம்
2022-11-27@ 00:26:42

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே அதானி வர்த்தக துறைமுக அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. தடியடி, கல்வீச்சால் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. இந்த துறைமுகத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விழிஞ்ஞம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், துறைமுகப் பணிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி நேற்று பணிகளை தொடங்க லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரிகளை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு லாரி கல்வீசி தாக்கப்பட்டது. அப்போது துறைமுகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் அங்கு திரண்டனர். இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். தொடர்ந்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் பதற்றம் நிலவியது.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!