அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி; அதிகாரம் நிரந்தரமில்லை
2022-11-27@ 00:26:36

அகமதாபாத்: ‘அதிகாரம் எப்போதும் நிலைத்து இருக்காது என்றும் அதிகாரம் ஒருநாள் பறிக்கப்படும்’ என்று அசாதுதீன் ஒவைசி கூறினார். குஜராத் மாநிலம், ஜுஹபுராவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்பி பேசும்போது, ‘‘2002ல் கலவரக்காரர்களுக்கு பாடம் புகட்டியதாகவும், அமைதியை ஏற்படுத்தியதாகவும் அமித் ஷா கூறி உள்ளார். அமித்ஷாவிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
2002ம் ஆண்டில் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் என்னவென்றால், பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் உங்களால் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் காங்கிரஸ் எம்பி அஹ்சன் ஜாப்ரி கொல்லப்படலாம் என்பதை நீங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். அந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கினால்தான் அமைதி ஏற்படும். ஒருவரிடம் அதிகாரம் எப்போதும் நிலைத்து இருக்காது. எல்லோரிடம் இருந்து அதிகாரம் ஒருநாள் பறிக்கப்படும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!