மலையில் இருந்து அடிவாரத்துக்கு ‘ரோப் கார்’ முறையில் சாராயம் விற்பனை; போலீசை கண்டதும் கும்பல் ஓட்டம்
2022-11-27@ 00:26:09

ஆற்காடு: ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கே.கே.தோப்பு மலையடிவாரத்தில் நூதன முறையில் சாராயம் விற்பனை செய்வதாக திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது ஒரு கும்பல் ‘ரோப் கார்’ முறையை பின்பற்றி, மலை மீது உள்ள மரத்திலிருந்து அடிவாரத்தில் உள்ள ஒரு மரக்கிளையை இணைத்து கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதில் பிளாஸ்டிக் பக்கெட்டை கட்டிவிட்டு, மலை மீது இருந்தபடியே கீழே விட்டு கொண்டிருந்தனர்.
இதில் சாராயம் வாங்குபவர்கள் எத்தனை பாக்கெட்டுகள் சாராயம் தேவையோ அதற்கான தொகையை பக்கெட்டில் வைத்தால், அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பக்கெட்டில் சாராய பாக்கெட்டுகளை வைத்து அனுப்பி கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் மலையின் மறுபகுதியில் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து நீளமான கம்பி, பக்கெட், லாரி ட்யூப் மற்றும் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!