மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் சேவையுடன் அடுத்தடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, சேவை தொடக்கம்; உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2022-11-27@ 00:25:50

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை முன்னரே அறிவிக்கும் வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, மாநகர போக்குவரத்து கழகத்தின் 150 பேருந்துகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், அடுத்து வரும் நிறுத்தங்களை தெரிந்துகொள்ள வசதியாக 300 மீட்டர் தூரத்திற்கு முன், நிறுத்தங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யும் வகையில் போக்குவரத்து துறை இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா 2 என 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., பல்லவன் இல்லத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேருந்தில் பயணம் செய்தார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!