சில்லி பாயின்ட்...
2022-11-27@ 00:04:50

* சவுதி அரேபிய அணியுடனான சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
* வலது கணுக்கால் காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மர் அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது, பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
* இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் (டிச. 10) போட்டியிடப் போவதாக முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி.உஷா அறிவித்துள்ளார்.
* ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நேற்று நடந்த முதல் டெஸ்டில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இந்த போட்டியில் ஆகாஷ்தீப் சிங் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து (10வது, 27வது, 59வது நிமிடம்) அசத்தினார். 2வது டெஸ்ட் இன்று நடக்கிறது.
* மகளிர் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் பைனலில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
* விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற உத்தரப் பிரதேச அணி காலிறுதிக்கு முன்னேறியது. கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
* குரோஷியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 2003ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறி உள்ளது.
மேலும் செய்திகள்
உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?
யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!