பிரேசிலில் 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி: முன்னாள் மாணவன் வெறிச்செயல்
2022-11-27@ 00:04:48

அராகிரஸ்: பிரேசிலில் 2 பள்ளிகளில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர். பிரேசிலின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில் 16வயதான மாணவன் தான் படித்த முன்னாள் பள்ளிக்கு துப்பாக்கியுடன் காரில் சென்றுள்ளான். பள்ளிக்குள் நுழைந்த மாணவன் அங்கிருந்த ஆசிரியர்களை பார்த்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து மற்றொரு பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் அங்கிருந்தவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் முதலில் துப்பாக்கி சூடு நடத்திய பள்ளியில் தான் கடந்த ஜூன் மாதம் வரை படித்து வந்துள்ளான். அதன் பின்னர் தான் மற்றொரு பள்ளிக்கு பெற்றோர் அவனை மாற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மாணவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!