பிரதமர் சுனக் முடிவால் இங்கிலாந்தில் படிக்க செல்வது கடினம்: புலம்பெயர்வதை தடுக்க நடவடிக்கை
2022-11-27@ 00:04:47

புதுடெல்லி: இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் கடந்த 2021ம் ஆண்டு 1.73 லட்சமாக இருந்த புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 5.04 லட்சமாக உயர்ந்துள்ளது. சுமார் 3.31 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வௌிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பது உட்பட அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளாதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குறைந்த தரம் பட்டம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களில், உயர்நிலை பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை கட்டுப்படுத்துவதும், மாணவர்களை சார்ந்தவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்துவதும் அடங்கும். அதே நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களில் நிதியுதவி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!