SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

2022-11-26@ 20:03:27

சென்னை: திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமித்து பொதுச்செயலாளர்துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்;

மருத்துவ அணி தலைவராக டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி., செயலாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ அணி துணை தலைவர்களாக எம்.செந்தில்நாதன், எ.வ.வே.கம்பன், கி.வரதராஜன், நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அணி இணைச் செயலாளர்களாக ரா.லட்சுமணன், அ.சுபேர்கான், ஆர்.கோகுல்கிருபா சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ அணி துணைச் செயலாளர்களாக செ. வெற்றிவேல், எம்.பி.பி.எஸ்., செ.வல்லபன், எம்.பி.பி.எஸ்., ஆர்.இராஜேஸ்வரி மோகன்காந்தி, எம்.பி.பி.எஸ்., ஜெ.அருண், பி.டி.எஸ்., எம்.டிஎஸ்., ஆர்.டி. அரசு, பி.டி.எஸ்., ஆர். அண்ணாமலை, கலை கதிரவன், எம்.பி.பி.எஸ்., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள்
திமுக பொறியாளர் அணியின் தலைவராக துரை கி.சரவணன், செயலாளராக கு.கருணாநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறியாளர் அணி இணைச் செயலாளராக அ. வெற்றிஅழகன், பொறியாளர் அணி துணைச் செயலாளர்களாக கு. சண்முகசுந்தரம், வே. உமாகாந்த், ரா. நரேந்திரன், சி.பிரதீப், ரா. ப. பரமேசுகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள்
தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர். மகேந்திரன், எம்.பி.பி.எஸ்., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்களாக கவிஞர் மனுஷ்யபுத்திரன், கோவி. லெனின் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக கார்த்திக் மோகன், எஸ்.டி. இசை, தமிழ் பொன்னி, சி.எச். சேகர், சி. இலக்குவன், அழகிரி சதாசிவம், ஏ.கே.தருண் விஸ்வநாதன், ஏ.தமிழ்மாறன், அ. தமிழ்மறை, நவின், எம்.பி.ஏ., எஸ். சுரேஷ், எம்.பி.ஏ., பி.கேசவன், எம்.கே. சிவா, எஸ். பத்மபிரியா, எஸ். பாலா, தரணிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகிகள்
சுற்றுச்சூழல் அணித் தலைவராக பூங்கோதை ஆலடிஅருணா, சுற்றுச்சூழல் அணிச் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி, நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்களாக செல்வகுமார், சாய் ஜெயகாந்த் பாரதி, சசிதரன், ஆர்.பி. செந்தில்குமார், கார்த்திகேயன் வேலுசாமி, மா. நாராயணமூர்த்தி, மணி சுந்தர், அருண், டாக்டர் சபி, வினோத் காந்தி, கே.ஆர். ரஞ்சன்துரை, கலைச்செல்வன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயலக அணி மாநில நிர்வாகிகள்
அயலக அணித் தலைவராக கலாநிதி வீராசாமி, எம்.பி., அயலக அணிச் செயலாளராக எம்.எம்.அப்துல்லா, எம்.பி.ஏ., எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர். அயலக அணி இணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், எஸ். செந்தில்குமார், எம்.பி., வழக்கறிஞர் பி. புகழ்காந்தி ப. பரிதி இளம்சுருதி, நியமிக்கப்பட்டுள்ளனர். அயலக அணி துணைச் செயலாளர்களாக விஜயன் இராமகிருஷ்ணன், முத்துவேல் ராமசாமி திருமதி உமாராணி, ப. பரிதி இளம்சுருதி, சேகர் ஜே. மனோகரன் கோ. ஸ்டாலின், நியமிக்கப்பட்டுள்ளனர்.

தணிக்கைக்குழு உறுப்பினர்கள்
திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக எம்.சுரேஷ்ராஜன், ஏனாதி ப.பாலசுப்பிரமணியன், ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்