குழந்தை வேண்டி சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
2022-11-26@ 18:36:55

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால், அவர் அப்பகுதியில் உள்ள மந்திரவாதி ஒருவரை சந்தித்து தனது குறையை கூறினார். அந்த மந்திரவாதி, ‘குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும்’ என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கொன்று அவனது ரத்தத்தை குடிக்க திட்டமிட்டார். அதற்காக அந்த சிறுவனை கடத்திக் கொன்றார்.
பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார். இந்த சம்பவம் கடந்த 2017ல் நடந்தது. இதுகுறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!