சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு மீண்டும் சிங்கப்பூர் பயணம்
2022-11-26@ 18:01:47

பாட்னா: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ், நேற்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரகம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிபட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூர் சென்ற லாலு யாதவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். முதற்கட்ட சிகிச்சை முடித்துக் கொண்டு மீண்டும் லாலு பீகார் திரும்பினார்.
சிங்கப்பூரில் வசிக்கும் அவரது இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தனது ஒரு சிறுநீரகத்தை தந்தைக்கு தானமாக வழங்க முன்வந்தார். அதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைபடி லாலு மீண்டும் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்ட லாலு, சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி மற்றும் அவரது கணவர் ஷைலேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது தந்தையை வழியனுப்பி வைத்தார்.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!