பிளஸ் 1 மாணவி கர்ப்பம்: பாலிடெக் மாணவன் கைது
2022-11-26@ 16:42:26

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா(19). இவர் பாலிடெக்னிக் கல்லூரில் 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும் ஐயங்குளம் கூட்ரோட்டில் இருந்து பஸ்சில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். அப்போது மாணவிக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரசன்னா அடிக்கடி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வாராம்.
அப்போது நைசாக பேசி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியை, பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் பிரசன்னா என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை நேற்று கைது செய்தனர்.
Tags:
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்மேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!