SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 நானோ செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி 54 வெற்றிகரமாக பாய்ந்தது: அமெரிக்கா, பூடான் நாடுகளின் செயற்கைகோளையும் சுமந்து சென்று சாதனை..!

2022-11-26@ 14:26:04

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 நானோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் ‘ஓசன் சாட்-3’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், ஐ.என்.எஸ். பூடான் சாட், பிக்ஸெல் நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகிய 8 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. அதேபோல், இந்தியா - பூடான் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ்-2பி செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இது 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக பூடான் சென்றபோது, இருநாடுகளுக்கு இடையே செயற்கைக்கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தற்போது ஐ.என்.எஸ் -2பி செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாகவும், இவை பூடானின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசைமாறுபாடுகள்,  வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை தரும் செயற்கைக்கோள்களாக விளங்குகிறது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டவையாக விளங்குகிறது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் தென் துருவத்தை நோக்கி பயணிக்க இருக்கிறது. சூரிய ஒத்திசைவு, சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த உள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டரிலும், 321 டன் எடையிலும், 740 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 18ம் தேதி ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் வடிவமைத்த 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கூடிய ‘விக்ரம்-எஸ்’ என்ற, முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்