சில்லி பாய்ன்ட்...
2022-11-26@ 00:09:15

* விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று அகமதாபாத்தில் நடக்கின்றன. அதில் ஜம்மு காஷ்மீர் - கேரளா, உத்தர பிரதேசம் - மும்பை, கர்நாடகா - ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ள தமிழகம் 28ம் தேதி சவுராஷ்டிராவை சந்திக்கிறது.
* ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜன.13 முதல் ஜன.29ம்தேதி வரை புவனேஸ்வர், ரூர்கேலா நகரங்களில் நடக்க உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை (ரூ.100 முதல் ரூ.500 வரை) https://insider.in/online என்ற இணையதளம் மூலமாக வாங்கலாம். முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், முன்னாள் வீரர்கள் இலவச டிக்கெட் பெறவும் இதே இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
* இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் பிடே உலக குழு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்தியா - உஸ்பெஸ்கிஸ்தான் அணிகள் மோதின. அதில் உஸ்பெகிஸ்தான் 7.5 - 4.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் சீனா 8-4 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் குழுவை வீழ்த்தியது. பைனலில் சீனா - உஸ்பெஸ்கிஸ்தான், 3வது இடத்துக்கு இந்தியா - ஸ்பெயின் மோத உள்ளன.
* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் நவ.27, 30, டிச.3, 4 தேதிகளில் நடைபெறும்.
மேலும் செய்திகள்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு: அஜித் ராம் அசத்தல் பந்துவீச்சு
கான்வே, டேரில் மிட்செல் அரை சதம் நியூசிலாந்து ரன் குவிப்பு
சில்லி பாயின்ட்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது இடத்துடன் விடைபெற்றார் சானியா
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!