உலக கோப்பை கால்பந்து 2022: கடைசி நிமிடங்களில் 2 கோல் வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்
2022-11-26@ 00:09:13

உலக கோப்பை கால்பந்து தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வேல்ஸ் அணியுடன் மோதிய ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை 0-0 என சமநிலை நிலவியது. 2வது பாதியிலும் இதே நிலை நீடித்ததால் 90 நிமிட ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி யாருக்கு என்பது முடிவாகாமல் இழுபறி நீடித்தது. கீப்பருக்கு சிவப்பு அட்டை: 86வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக வேல்ஸ் கோல் கீப்பர் வேய்ன் ஹென்னஸி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. நடப்பு உலக கோப்பையில் ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் ஹென்னஸி தான். அவருக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டப்பட்ட நிலையில், ‘விஏஆர்’ மெய்நிகர் நடுவரின் முடிவால் அது சிவப்பு அட்டையாக மாறியது குறிப்பிடத்தக்கது. வீரர்களுக்கு காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக 13 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட... 90’+8’ல் ரூஸ்பெஹ் செஸ்மி, 90’+11’ல் ரமின் ரிஸேயன் கோல் அடிக்க, ஈரான் அணி 2-0 என்ற கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்து 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.
Tags:
World Cup Football 2022 2 goals Wales defeated Iran உலக கோப்பை கால்பந்து 2022 2 கோல் வேல்ஸ் அணி வீழ்த்தியது ஈரான்மேலும் செய்திகள்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு: அஜித் ராம் அசத்தல் பந்துவீச்சு
கான்வே, டேரில் மிட்செல் அரை சதம் நியூசிலாந்து ரன் குவிப்பு
சில்லி பாயின்ட்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது இடத்துடன் விடைபெற்றார் சானியா
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!