SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை கால்பந்து 2022: ரிச்சர்லிசன் ஜாலத்தில் பிரேசிலுக்கு ரிச் வெற்றி

2022-11-26@ 00:09:12

தோஹா: செர்பிய அணியுடனான ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், ரிச்சர்லிசன் அடித்த அற்புதமான கோல்களால் பிரேசில் அணி வெற்றியை வசப்படுத்தியது. லுசெய்ல் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில், உலகின் நம்பர் 1 அணிக்கு உரிய வேகத்துடன் பிரேசில் ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. அந்த வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய செர்பிய வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதன் காரணமாக, பிரேசில் வீரர்கள் அலைஅலையாக அடிக்கடி செர்பிய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினாலும், முதல் பாதியில் அவர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தனர். 2வது பாதியிலும் செர்பியாவின் தடுப்பு அரண் வலுவாகவே எதிர்த்து நின்று சமாளித்தது. ஆனால், ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அந்த நிலைமை ஏதோ மாயாஜாலம் போல அடியோடு மாறியது. முன்கள வீரர் வினிசியஸ் ஜூனியர் கோலை நோக்கி அடித்த பந்து திசை மாற, அதை மற்றொரு முன்கள ஆட்டக்காரர் ரிச்சர்லிசன் வாகாக வாங்கி மின்னல் வேகத்தில் ‘பைசைக்கிள்’ கிக் அடித்து கோலாக்கினார். நடப்பு தொடரின் மிகச் சிறந்த கோலாக கொண்டாடும் அளவுக்கு அதியற்புதமாக அமைந்த அந்த கோல், செர்பிய வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

1-0 என முன்னிலை கிடைத்ததை அடுத்து உற்சாகமான பிரேசில் அணி தாக்குதலை தீவிரப்படுத்த, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் பந்தை துடிப்பாக கடத்திச் சென்று மீண்டும் கோலாக்கி அசத்தினார். அதன் பிறகு கோலடிக்க இரு அணிகளும் தொடர்ந்த முயற்சிகள் தடுப்பு ஆட்டக்காரர்களால் முறியடிக்கப்பட்டன. பிரேசிலின் 24 கோல் முயற்சிகளை செர்பிய வீரர்களும், கோல் கீப்பரும் தடுத்தனர். அதில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் ஜூனியர் மட்டும் 13, 21, 50, 58வது நிமிடங்களில் என 4 முறை கோலடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்