SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்யம்: வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

2022-11-25@ 17:11:35

திருவெறும்பூர்: திருச்சி ஓலையூரை சேர்ந்த கண்ணன் மகள் பிரியதர்ஷினி(27). இவருக்கு கடந்த மார்ச் மாதம் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் குமரன்(30) என்பவருடன் திருமணம் நடந்தது.  தம்பதி இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். குமரனுடன் 15 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்திய பிரியதர்ஷினி, குடும்ப தகராறு காரணமாக ஓலையூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் பிரியதர்ஷினி புகார் செய்தார். அதில், எனது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயப்படுத்தி கணவர் குமரன் உடலுறவு வைத்து கொண்டார். இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தெரிவித்தும் மகனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் திருச்சி மகிளா கோர்ட்டில் புகார் மனுவை பிரியதர்ஷினி அளித்தார்.

இந்த மனு மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொள்ளுதல், வரதட்சணை கொடுமை, கையால் அடித்தல், ஆபாசமாக திட்டுதல், ஆயுதத்தால் கொலை செய்வதாக மிரட்டுதல் என 5 பிரிவுகளின்கீழ் குமரன், இவரது தந்தை தியாகராஜன், தாய் பவானி (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது நேற்று வழக்குப்பதிந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்