SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் மிரட்டல்; இளம்பெண் பரபரப்பு புகார்

2022-11-25@ 17:08:43

கோவை: தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக சினிமா தயாரிப்பாளர் மிரட்டல் விடுப்பதாக கோவை போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (31). சினிமா தயாரிப்பாளர். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை சினிமாவில், நடிக்க வைப்பதாக கூறி பொள்ளாச்சிக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பார்த்திபன் பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சினிமா தயாரிப்பாளர் பார்த்திபனை கைது செய்தனர். இதனையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோவை வேடப்பட்டியை சேர்ந்த அவரது மனைவியான 32 வயது இளம்பெண் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் பார்த்திபன் மீது ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பார்த்திபன் சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். அங்கு பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபட்டார். இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து நான் பீளமேடு போலீசில் புகார் செய்தேன். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அடுத்த நாள் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட எனது கணவர், எனக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.

இந்நிலையில், எனது சகோதரரை தொடர்பு கொண்ட பார்த்திபன், தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட உனது சகோதரியின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். தற்போது எனக்கும், பார்த்திபனுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே, எனது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் பார்த்திபன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்பட 4 பேர் மீதும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்