SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்

2022-11-25@ 17:07:30

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(45). இவர், சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பொய்யாபிள்ளைசாவடி என்ற இடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு அருகிலேயே உள்ள தாயம்மாள் நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணேஷ் உரம் பூச்சி மருந்து கடை வைத்ததில் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேஷ் வீட்டிற்கு திராட்சை ஜூஸ் வாங்கி வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் அதில் எலி பேஸ்டை கலந்துள்ளார். பின்னர் அந்த ஜூஸை தனது மனைவி பிரபாவதி (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண்(9) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் விஷம் கலந்த ஜூசை தானும் குடித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை கணேஷின் மனைவி, குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்க்க முடியாத கணேஷ், தனது சொந்த ஊரான வாண்டையாம்பள்ளத்தில் உள்ள முந்திரி தோப்புக்கு சென்றுள்ளார். அங்கிருந்து செல்போனில் தன் நண்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், தனக்கு கடன் அதிகமாகி விட்டதால், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டேன். அவர்கள் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும், தன்னிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பெயரையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மெசேஜை பார்த்த கணேஷின் நண்பர் இது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே கணேஷின் உறவினர்கள், சிதம்பரம் தாயம்மாள் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு பிரபாவதி, அவரது மகள் சங்கமித்ரா, மகன் குரு சரண் ஆகிய 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்தனர். அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணேஷின் உடலை புதுச்சத்திரம் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்