SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

உத்திரமேரூரில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு

2022-11-25@ 16:54:40

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் இருளர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டார்.

அப்போது, கட்டுமான பணிகள் தரமானதாகவும் விரைவில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மக்களை தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படும் இடங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது காஞ்சி கலெக்டர் ஆர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், வரதராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி முரளிகார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்