SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

வியாபாரியை தாக்கியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு

2022-11-25@ 16:38:41

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தை சேர்ந்தவர் ஈசாக். இவர் வடசேரி கனகமூலம் சந்தையில், முருங்கைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுடன் எனக்கு நட்பு உண்டு. அந்த வகையில் வியாபாரம் சம்பந்தமாக நாஞ்சில் முருகேசனிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டு இருந்தேன்.

சம்பவத்தன்று இந்த கடன் தொகையை தருவதாக என்னை அழைத்தார். அதன் பேரில் நான் அவரை சந்திக்க புத்தேரி பராசக்தி கார்டன் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் பேச்சான்குளத்தை சேர்ந்த மகேஷ் ஆகியோர் என்னை பார்த்ததும், தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறி இருந்தார். அதன் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, நாஞ்சில் முருகேசன் மீது 3 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்