அளவுக்கு மீறினால்...
2022-11-25@ 00:27:10

நமது அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடைகாலங்களில் நா வறட்சி ஏற்படும் போது தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. உடல் சோர்வு, செரிமானமின்மை ஆகியவற்றுக்கு சுடுநீர் குடிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கப்படுகிறது. வெயில் காலத்தில் நாம் பருகும் தண்ணீர் வியர்வை மூலமாக வெளியேறுகிறது. அதே போன்று குளிர்காலங்களில் சிறுநீர் மூலம் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. இப்படி இயற்கையாகவே நமது உடல் அமைப்பு செயல்படுகிறது. ஆனால் ஒருவரது உடல் அமைப்புக்கு ஏற்ப தண்ணீரின்தேவை மாறுபடும்.
எனவே, அதை புரிந்து கொண்டு நாம் தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் ஒருவர் நாள்தோறும் அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம் என்பதற்கேற்ப அதிகமாக தண்ணீரை குடிக்கும் போது ரத்த நாளங்களில் தண்ணீர் சேரும் அபாயம் , உடலில் சோடியத்தின் அளவு குறைந்து மாற்றங்கள் ஏற்படுதல், சோர்வு, உடல் உபாதைகள் ஏற்படும் நிலையும் உருவாகும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் பருகும் போது குமட்டல் , வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும். கைகள், பாதங்கள், உதடு வெளிறிக்காணப்படும்.
நம் உடலில் உள்ள சோடியம் தான் நம் செல்களுக்கு தகவல்களை அனுப்புகிறது. அது குறையும் பட்சத்தில் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் கிட்னி பாதிப்பு, மூளை பாதிப்பு ஆகியனவும் ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் கிட்னியின் வேலை அதிகரிக்கிறது. எனவே அது தொடர்ந்து செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் உடலும், மனமும் சோர்வடைந்து கவலையை ஏற்படுத்துகிறது.
உலகப்புகழ்பெற்ற நடிகர் புரூஸ்லி 32 வயதில் காலமானார். இவர் மரணத்துக்கு காரணம் அதிகப்படியான தண்ணீர் குடித்தது தான் என்று 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர் இறந்த நேரத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், வலி நிவாரணி அதிகம் எடுத்துக்கொண்டதால் மூளை வீங்கி அவர் மரணமடைந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் அவர் அதிகப்படியான தண்ணீர் குடித்ததால் அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கிட்னி செயலிழந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதிப்படியான தண்ணீரை உடல் வெளியேற்ற முடியாத நிலைக்கு ஹைப்போதிஸ் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலும் மூளை வீக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறும் மருத்துவ நிபுணர்கள், அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு சமநிலை அடையாமல் மூளை மட்டுமின்றி உடலும் வீக்கமடையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நமக்கு தேவையான தண்ணீரை அளவோடு குடித்து ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.
மேலும் செய்திகள்
ராகுலின் உறுதி
துணை நிற்போம்
குடியரசு கோலாகலம்
மிகப்பெரும் கவுரவம்
இதுவே சிறந்த வழி
தலைநிமிர்ந்த பாரம்பரியம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!